.... சொல் விளக்கம் .........
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 15, 2023
ஆசைகூர் பத்தனேன் ... உன் மீது ஆசை மிகுந்த பக்தியை
உடைய நான்
மனோ பத்மமானபூ வைத்து ... மனம் எனப்படும் தாமரை மலரை
வைத்து,
நடுவேயன்பானநூலிட்டு ... இடையில் அன்பு என்னும் நாரைக்
கொண்டு,
நாவிலே சித்ரமாகவே கட்டி ... நாக்கு என்னும் இடத்திலே அழகான
ஒரு…
முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை தெய்வமாக வழிபடுகிறோம்.. முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காவும் , அனைவருக்கும் பக்தியை உணரச்செய்வதற்காவும் தொடங்கப்பட்டதே இந்த இணைய மையம். thaipoosam.in Email: vselvaraj@vselvaraj.com. whatsapp: 9843019701. இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்.
Sunday, October 15, 2023
திருப்புகழ் . ஆசைகூர் பத்தனேன்
முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?
"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என்று அனைவரும் சொல்லக் கேட்டிருப்போம். நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றது.
அகஸ்திய முனிவருக்கு 'இடும்பன்" என்ற ஒரு சீடர் இருந்தார். ஒருமுறை இடும்பனை அழைத்த அகஸ்தியர், கயிலைக்குச் சென்று அங்கு முருகனின் மலையான கந்தமலையிலுள்ள சிவசக்தி சொரூபமான 'சிவகிரி", 'சந்திரகிரி" என்னும் இரண்டு மலைகள் வழிப்பாட்டிற்கு தேவைப்படுகிறது கொண்டு வா என்றார். குருவின் கட்டளையை ஏற்று இடும்பன், கந்தமலைக்குப் புறப்படுகிறார். இருமலைகளையும் சுமந்து வருவதற்கு வசதியாக காவடியாகக் கட்டி, அதைத் தன் தோளில் தாங்கிக் கொண்டு புறப்படுகிறார்.
இதனைக் கண்ட முருகப் பெருமானோ, தனது விளையாட்டைத் தொடங்குகிறார். இரண்டு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வருகிறார் முருகன். மேலும் இடும்பனுக்கும் அருள் புரிய வேண்டும் என்றும் எண்ணினார். இந்த இரு மலைகளையும் தாங்கி வரும் இடும்பனுக்கோ நடுவில் வழி தெரியாமல் நின்ற போது ஓர் அரசனைப் போல் தோற்றம் எடுத்து வந்த முருகன், இடும்பனை ஆவின்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுக்குமாறு கூறுகிறார்.
இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். உடனே, அவனை மலையில் இருந்து இறங்குமாறு கூற, அச்சிறுவனோ, இந்த மலை எனக்கே சொந்தம் என்கிறான்.
கோபம் கொண்ட இடும்பன் சிறுவனைத் தாக்க முயல, அப்படியே சாய்ந்து விழுகிறான் இடும்பன். இதனை அறிந்த அகஸ்தியர், முருகனிடம் வேண்ட இடும்பனுக்கு ஆசி வழங்குகிறார் முருகன். இடும்பனைத் தன் காவல் தெய்வமாகவும் நியமனம் செய்கிறார். அன்று முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உருவானது. ஆகையால் வேண்டுதல் நிறைவேறிய பின் முருகனுக்கு காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
Friday, October 13, 2023
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 9, 2023
குமாரஸ்த்தவம் pic.twitter.com/5ohZEyv3vm
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியபரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியபரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் pic.twitter.com/gTz3X8lsFO
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 9, 2023
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ஸ்ரீ தெளத்தியம் (திருவடித் துதி)
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ஸ்ரீ தெளத்தியம் (திருவடித் துதி)#தெளத்தியம் #திருவடித்துதி pic.twitter.com/7uh30ZIm1P
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 9, 2023
கந்தர் அநுபூதி
கந்தர் அநுபூதி நுல் அருணகிரி நாதரால் பாடப்பட்டது. 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. ‘அனு’ என்பது அனுபவம். ‘பூதி’ என்பது புத்தி. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.#கந்தர்அநுபூதி#அருணகிரிநாதர் #திருப்புகழ் #thaipoosam #தைபூசம்… pic.twitter.com/RsciaEStKP
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 10, 2023
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பகை கடிதல்
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பகை கடிதல்#பகைகடிதல் pic.twitter.com/8Bh0RswYfM
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 11, 2023
இடரினும் தளரினும் பாடல் || திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
இடரினும் தளரினும் பாடல் || திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் || Thirugnanasambandar devara pathigam || திருஞானசம்பந்தர், சிவனிடம் தம் தந்தைக்காக செல்வம் வேண்டி வரம் பெற்ற பதிகம் pic.twitter.com/C3lSoXcnbc
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 13, 2023
Sunday, October 8, 2023
திருப்புகழ் .திருமகள் உலாவும் (கதிர்காமம்)
#திருப்புகழ் .திருமகள் உலாவும் (கதிர்காமம்)#Thiruppugazh thirumagaLulAvum (kadhirgAmam) pic.twitter.com/FzH5G8mpF2
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 8, 2023
திருமண வரம் தரும் திருப்புகழ்
திருமண வரம் தரும் #திருப்புகழ் pic.twitter.com/gsOXTRI1rX
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 7, 2023
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். கைத்தலம் நிறைகனி (விநாயகர் துதி)
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 6, 2023
கைத்தலம் நிறைகனி (விநாயகர் துதி)
வினையை நீக்கும் விநாயகரை வணங்குகின்றேன்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு… pic.twitter.com/LXSa5uACiO
Thursday, October 5, 2023
நீலங்கொள் மேகத்தின் - திருமண வரம் தரும் திருப்புகழ் .
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 2, 2023
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத...
-
சத்ரு சம்ஹார திரிசதி Sathru Samhaara Thrisathi ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் எ...
-
Om Reeng Rahanabavasa | ஓம் றீங் ரஹணபவச | செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாக. முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம். சகல ஜன வசீக...
-
Om Reeng Saravana Bhava || ஓம் றீங் சரஹணபவ || சர்வ வசீகரம் உண்டாக . முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம் சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுத...