Tuesday, January 7, 2025

ஓம் நமசிவாய - நவகைலாயங்கள் தல வரலாறு

தமிழகத்தின் நவ கைலாயங்கள் (Nava Kailasam) என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். 

வரலாறு

அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.

நவகைலாயங்கள்

பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய ஊர்களை நவகைலாயங்கள் என்று அழைக்கின்றனர். இவற்றில் முதல் மூன்று தலங்களை மேல்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று தலங்களை நடுகைலாயங்கள் என்றும், இறுதி மூன்றினை கீழ்க்கைலாயங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்.

இந்த நவகைலாயத் தளங்களில் நவக்கிரங்களின் வழிபாடுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தத் தலங்களில் நவக்கிரங்கள் வழிபட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

வ.எண்ஊர்கோயில்வழிப்பட்ட கிரகம்கைலாய வகை
1பாபநாசம்பாபநாசநாதர் கோயில்சூரியன்மேல்கைலாயம்
2சேரன்மாதேவிசேரன்மகாதேவி கைலாசநாதர் கோயில்சந்திரன்மேல்கைலாயம்
3கோடகநல்லூர்கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில்செவ்வாய்மேல்கைலாயம்
4குன்னத்தூர்குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில்இராகுநடுகைலாயம்
5முறப்பநாடுமுறப்பநாடு கைலாசநாதர் கோயில்குருநடுகைலாயம்
6திருவைகுண்டம்திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில்சனிநடுகைலாயம்
7தென்திருப்பேரைதென்திருப்பேரை கைலாசநாதர் கோயில்புதன்கீழ்கைலாயம்
8ராஜபதிஇராஜபதி கைலாசநாதர் கோயில்கேதுகீழ்கைலாயம்
9சேர்ந்த பூமங்கலம்சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில்சுக்கிரன்கீழ்கைலாயம்
 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

  சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே  தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே  பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே  பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத...