முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை தெய்வமாக வழிபடுகிறோம்..
முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காவும் , அனைவருக்கும் பக்தியை உணரச்செய்வதற்காவும் தொடங்கப்பட்டதே இந்த இணைய மையம். thaipoosam.in Email: vselvaraj@vselvaraj.com. whatsapp: 9843019701. இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்.
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நம என்ற மந்திரம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த ஆன்மீக மந்திரம் ஆகும். இது பல சக்திகளையும், தெய்வீக அம்சங்களையும் உள்ளடக்கியது:
ஓம் (Om): உலகளாவிய ஒலி, ஆன்மீக ஒருமைப்பாட்டை குறிக்கிறது.
சௌம் (Soum): இது முருகனின் சக்தியை மற்றும் வெற்றியை குறிக்கிறது. இது முருகனின் பிஜா மந்திரமாக கருதப்படுகிறது.
சரவணபவ (Saravanabava): இது முருகனின் ஒரு பெயர் அல்லது அவருடன் தொடர்புடைய ஒரு மந்திரம், இது அவரது பிறப்பை சுட்டிக்காட்டுகிறது (சரவணபொய்கையில் பிறந்ததால்).
ஸ்ரீம் (Shreem): செல்வம், வளம், மற்றும் நற்பேறுகளை குறிக்கிறது, இது முருகனின் ஆசிர்வாதத்தை அழைத்து வருகிறது.
ஹ்ரீம் (Hreem): மாயை சக்தியை தூண்டுகிறது, ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது.
க்லீம் (Kleem): ஈர்ப்பு, காதல், மற்றும் மனத்தை கவர்ந்திழுக்கும் சக்தியை குறிக்கிறது, முருகனின் அன்பை உணர்வதற்கு உதவுகிறது.
க்லௌம் (Klaum): இது சில தந்திர மரபுகளில் சிறப்பு சக்திகளை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, இது முருகனின் வீரத்தை மற்றும் சக்தியை குறிக்கலாம்.
ஸௌம் (Soum): மீண்டும் முருகனின் பிஜா மந்திரம், இது முந்தைய "சௌம்" உடன் இணைந்து அவரது சக்தியை மேலும் அதிகரிக்கிறது.
நம (Nam): "நமஸ்" என்பதன் சுருக்கம், இது மரியாதை அல்லது அர்ச்சனை செய்வதை குறிக்கிறது.
பயன்கள்:
ஆன்மீக வளர்ச்சி: இந்த மந்திரம் முருகனின் ஆசிர்வாதத்தை நோக்கி இருப்பதால், ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது.
சக்தி தூண்டுதல்: பல பிஜா மந்திரங்களை உள்ளடக்கியதால், இது சக்திகளை தூண்டுகிறது.
பாதுகாப்பு மற்றும் வெற்றி: முருகனின் வீரத்தையும், பாதுகாப்பையும் அழைத்து வருகிறது.
அன்பு மற்றும் செல்வம்: க்லீம் மற்றும் ஸ்ரீம் மந்திரங்கள் அன்பு, செல்வம் மற்றும் நற்பேறுகளை அதிகரிக்க உதவுகின்றன.
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நம. கந்த குரு கவசம் மூல மந்திரம் pic.twitter.com/vkoPb4edeQ
Enjoyed my work? If my writing, or content have helped or inspired you, please consider supporting me with a small donation. Every contribution means the world and helps me keep creating and improving!
காவடி என்பது முருகனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு மிகவும் முக்கியமான வழிபாடு முறை, குறிப்பாக தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. காவடி சுமந்து செல்வது ஒரு விரதம் மற்றும் அர்ப்பணிப்பு செயலாக கருதப்படுகிறது. பிஜா மந்திரங்கள் இந்த பயணத்தின் போது சக்தியை தூண்டி, ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படலாம். இங்கு சில பிஜா மந்திரங்கள் உள்ளன, இவை காவடி பயணத்தின் போது பயன்படுத்தப்படலாம்:
ஓம் (Om): சகல மந்திரங்களின் தொடக்க சப்தம், ஆன்மீக ஒருமைப்பாட்டையும், உலகளாவிய சக்தியையும் குறிக்கிறது. காவடியை சுமந்து செல்வதற்கு முன் இதை உச்சரிப்பது நல்லது.
ஸ்ரீம் (Shreem): செல்வம் மற்றும் வளத்திற்கு உதவுகிறது, ஆனால் இது முருகனின் ஆசியை நோக்கி உபயோகிக்கப்படலாம்.
ஹ்ரீம் (Hreem): மாயை சக்தியை தூண்டுகிறது, ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது. இது முருகனின் விசுவாரூபத்தை உணர்வதற்கு பயன்படுத்தப்படலாம்.
க்ரீம் (Kreem): காலி மற்றும் துர்கா தேவிகளின் சக்தியை குறிக்கிறது, ஆனால் இது முருகனின் பாதுகாப்பு மற்றும் சக்தியை அழைத்து வருவதற்கு பயன்படுத்தப்படலாம்.
சவும் (Soum): இது முருகனின் சக்தியையும், வெற்றியையும் குறிக்கும் ஒரு பிஜா மந்திரம். முருகனுக்கு அர்ப்பணிக்கப்படும் வழிபாடுகளில் இது மிகவும் பொருத்தமானது.
க்ரௌம் (Kraum): முருகனுடன் தொடர்புடைய மற்றொரு பிஜா மந்திரம், இது அவரது வீரத்தை மற்றும் பாதுகாப்பை தூண்டுகிறது.
பயன்பாடு:
தியானம்: காவடி சுமந்து செல்வதற்கு முன் அல்லது பின் தியானத்தில் இந்த மந்திரங்களை உபயோகிக்கலாம்.
ஜபம்: காவடி பயணத்தின் போது மந்திரங்களை உச்சரிப்பது சக்தியை தூண்டுகிறது.
ஆன்மீக முயற்சி: இந்த மந்திரங்கள் உச்சரிப்பது விரதத்தின் ஆன்மீக சக்தியை அதிகரிக்கிறது.
சிவாய நம ஓம் கிலீம் என்பது ஒரு மந்திரம், இது சிவபெருமானை வணங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த மந்திரத்தில்:
சிவாய நம - இது "சிவனுக்கு நமஸ்காரம்" என்று பொருள்படும், அதாவது சிவபெருமானுக்கு மரியாதை செலுத்துவது.
ஓம் - இது உபநிஷத்களில் குறிப்பிடப்பட்ட ஒரு பரம்பொருள் மந்திரம், அனைத்து சக்திகளின் ஆதி ஒலியாகக் கருதப்படுகிறது.
கிலீம் - இது ஒரு பீஜ மந்திரம், இது வளர்ச்சி, பாசம், மற்றும் மனப்பூர்வமான சக்திகளுடன் தொடர்புடையது என்று கருதப்படுகிறது.
இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், சிவனின் ஆசீர்வாதத்தையும், உள்ளுணர்வு, வளர்ச்சி, மற்றும் பிரபஞ்ச சக்திகளுடன் இணைப்பையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
தமிழகத்தின் நவ கைலாயங்கள் (Nava Kailasam) என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
வரலாறு
அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.
நவகைலாயங்கள்
பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய ஊர்களை நவகைலாயங்கள் என்று அழைக்கின்றனர். இவற்றில் முதல் மூன்று தலங்களை மேல்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று தலங்களை நடுகைலாயங்கள் என்றும், இறுதி மூன்றினை கீழ்க்கைலாயங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்.
இந்த நவகைலாயத் தளங்களில் நவக்கிரங்களின் வழிபாடுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தத் தலங்களில் நவக்கிரங்கள் வழிபட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
ஆச்சரியப்படத்தக்க முறையில் எல்லா தேவர்களையும் தெய்வங்களையும் முன்னிலைப்படுத்தி சரவணனது அடியார்களை எதிர்ப்போரை அடியோடு அழித்து இல்லாமல் செய்துவிடும் என்பதாகப் பொருள். எதிரிகள் என்பதை தீமை, வறுமை, நோய்கள் துயரங்கள் என்று கொள்வது சாலச்சிறந்தது!
பட்சணங்கள் அமுது செய்யும் வினாயகன் வாழ்க! திருமாலும் திருமகளும் வாழ்க! சந்திர சூரியரோடு அயிராவதம் எனும் தேவலோக யானையும் வாழ்க! முப்பத்து மூன்று கோடி வானவர்கள் உள்ள தேவலோகம் வாழ்க! பிரம்மா விஷ்ணு, மகேசன் ஆகிய மூவர் வாழ்க! கருடனும், கந்தர்வரும், முனிகளும் ரிஷிகளும் இந்திரனும் அவனது தேவி இந்திராணியும் வாழ்க! சித்தர்கள், வித்யாதரர்கள், இசைபாடி உலவும் கின்னரர்கள் இவர்களோடு மற்ற தேவதைகளும் வாழ்க! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
2. பாடல்
சித்தி சுந்தரி கௌரி அம்பிகை க்ருபாநிதி
சிதம்பரி சுதந்தரி பரசிற்பரி
சுமங்கலி நிதம்பரி விடம்பரி
சிலாசுத விலாஸ விமலி
கொத்து திரிசூலி திரிகோணத்தி
ஷட்கோண குமரி கங்காளி ருத்ரி
குலிச ஓம்காரி ரீம்காரி ஆங்காரி
ஊங்காரி, ரீங்காரி அம்பா
முத்தி காந்தாமணி முக்குண
துரந்தரி மூவர்க்கு முதல்வி
ஞான முதுமறைக் கலைவாணி அற்புத
புராதனி மூவுலகும் ஆன சோதி !
சத்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
[36 சக்தியின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சக்தியின் அருள் முழுதும் உண்டு]
2. பாடல் விளக்க உரை
முருகப்பிரானுக்கு ஞானமாகிய சக்தி வேலைத் தந்தவள் அன்னை பார்வதி! அவளைப் பலப்பல பெயர்கள் சொல்லி வணங்குவர். இதில் அன்னையைப் போற்றும் இந்த நாமங்கள்தான் சக்திவாய்ந்தவை. இந்தப்பதிகத்தை ஓதுவதால் அன்னை அருள் கிட்டும். அவள் தந்த வேலின் சக்தி எத்தகையது! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
3. பாடல்
மூரியுள முப்பத்து முக்கோடி
தேவரும் முனிவரோடும் அசுரர் கூடி
முழுமந்த்ர கிரி தன்னைமத்தாகவே
செய்து முற்கணத்து அமுது பெறவே
கோரமுள வாசுகியின் ஆயிரம்
பருவாயில் கொப்பளித்திடு விடங்கள்
கோளசையும் மண்டலங்கள் யாவையும்
எரித்திடும் கொடிய அரவினைப்பிடித்து
வீரமுடன் வாயினால் குத்தி
உதிரம் பரவ இரு தாளிலே மிதித்து
விரித்துக் கொழும் சிறகடித்தே எடுத்து உதறும்
விதமான தோகைமயில் சாரியாய்
தினமேறி விளையாடி வரும் முருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
3. பாடல் விளக்க உரை
முன்னொருகாலத்தில் அழியாத்தன்மை பெற தேவரும் அசுரரும் மந்தரமலையை மத்தாக்கி வாசுகி எனும் பாம்பினைக் கயிறாக்கிப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வலிபொறாத நாகத்தின் வாயினின்றும் கொடியவிடம் கொப்பளித்து பெருகி, கிரகங்கள் சுழலும் இந்த மண்டலத்தை எரிக்கலாயிற்று. அந்த ஆலகாலத்தை சிவன் அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தி நீலகண்டன் ஆனார். அந்த அரவினைப் பிடித்து, தன் அலகினால் குத்தி, இருகால்களால் மிதித்துத் தன் சிறகுகளை விரித்து எடுத்து உதறும் வல்லமை பெற்றது முருகனது வாகனமாகிய மயில்! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
4.பாடல்
உக்ரமுள தாருகன் சிங்கமா சூரனும்
உன்னுதற்கு அரிய சூரன்
உத்தி கொளும் அக்னிமுகன் பானுகோபன்
முதல் உத்தண்ட அசுரர் முடிகள்
நெக்குவிட கரி புரவி தேர்கள்
வெள்ளம் கோடி நெடிய பாசங்கள் கோடி
நிறையிலா வஸ்திரம் வெகுகோடிகள்
குருதி நீரில் சுழன்று உலவவே
தொக்குத் தொகுத் திதி திதிமி டுண்டு டுடு
டகுகுடிகு துந்துமி தகு குதி திகுதை
தோத்திமி டங்கு குகு டிங்கு குகு
சங்குகென தொந்தக் கவந்தம் ஆட
சக்ரமொடு சக்திவிடு தணிகை சென்னியில் வாழும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
4. பாடல் விளக்க உரை
அன்னை தந்த வேலும் வலியது! முருகன் ஏறும் மயிலும் வலியது! அந்த முருகனது வல்லமை சொல்லிமுடியுமோ? ஆணவம் - கன்மம் - மாயையின் உருவான தாருகன், சிங்கமுகன், சூரபதுமன், அக்னிமுகன், பானுகோபன் ஆகிய அசுரர்களையும் அவர்களது அரக்கர் படைகளையும் பொடிப்பொடியாக்கினான் முருகன். அசுரரது முடிகள் சிதற, ரத்தவெள்ளத்தில் யானை, குதிரைகள், தேர்கள், அசுரரது அஸ்திரங்களும் ஆடைகளும் சுழன்று ஓடுகிறதாகச் சொல்கிறார் சுவாமிகள்! கோபாவேசத்தோடு குமரன் சக்திவேலைச் சுழற்ற, குதித்தும் எகிறியும் தலையற்ற உடல்கள் [கவந்தம்] ஜதியோசைபோல் ஆடுவது பயங்கரமாக இருந்ததை காட்டும் வரிகள். முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
5. பாடல்
அந்தியில் பேச்சி உறுமுனி காட்டேரி
அடங்காத பகல் இரிசியும்
அகோர கண்டம் கோர கண்ட சூன்யம்
பில்லி அஷ்ட மோஹினி பூதமும்
சந்தியான வசுக்குட்டி, சாத்தி
வேதாளமும் சாகினி இடாகினிகளும்
சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி
முதல் சஞ்சரித்திடு முனிகளும்
சிந்தை நொந்தலறி திரு வெண்ணீறுகாணவே
தீயிலிடும் மெழுகுபோல
தேகமெல்லாம் கருகி நீறாகவே நின்று
சென்னியிரு தணிகை மலையில்
சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
5.பாடல் விளக்க உரை
முருகனது நெற்றியில் ஒளிவீசும் திரு வெண்ணீற்றினைக் கண்டதுமே தீய சக்திகள் என்று உலகத்தோர் அச்சப்படும் துர்த்தேவதைகள் எல்லாம் அனலில் இட்ட மெழுகுபோல் கருகிச் சாம்பலாகிவிடும். பேய்ச்சி, உறுமுனிக் காட்டேரி, இரிசி, அகோர கண்டம், கோரகண்ட சூனியம், பில்லி, மோஹினிப்பிசாசு, பூதம், குட்டிச்சாத்தான், வேதாளம், சாகினிகள், டாகினிகள், சாமுண்டி, பகவதி, ரத்தக்காட்டேரி, ஓடித் தொல்லைதரும் முனிகள் ஆகியவை இன்றும் கிராமப்புறங்களில் நடமாடுவதாகச் சொல்கின்றனர். இதற்கெல்லாம் முடிவு கட்ட கந்தன் திருநீறு அணிந்தால் போதும்! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
6. பாடல்
கண்டவிட பித்தமும் வெப்புத் தலைவலி
இருமல் காமாலை சூலை,
குஷ்டம், கண்ட மாலை,
தொடைவாழை வாய்ப்
புற்றினொடு கடினமாம் பெருவியாதி
அண்டொணாதச் சுரஞ் சீதவாதச்சுரம்
ஆறாத பிளவை குன்மம்
அடங்காத இரு பஃது மேகமுடன்நால்
உலகத்தி லெண்ணாயிரம் பேர்
கொண்டதொரு நோய்களும்
வேலென்றுரைத்திடக் கோவென ஓலமிட்டுக்
குலவுதினகரன்முன் மஞ்சுபோல்
நீங்கிடும் குருபரன் நீறணிந்து,
சண்டமாருத கால உத்தண்ட கெம்பீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
6. பாடல் விளக்க உரை
இந்தப்பதிகம் உலகில் உள்ள 8000 வகையான நோய்களைப் பட்டியல் இட்டு, அனைத்துக்கும் சஞ்சீவினி மருந்து முருகனது திருநீறு என்று காட்டுகிறது. பகைவருக்குச் சண்டமாருதமெனும் புயலாகவரும் முருகன் நோய்களைத் தீர்ப்பான் என்று காட்டும் பதிகம். முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
7. பாடல்
மகமேரு உதயகிரி அஸ்திகிரியும்
சக்ரவாளகிரி நிடதவிந்தம்,
மா உக்ரதர நர சிம்மகிரி யத்திகிரி
மலைகளொடும் அதனை சுமவா
ஜெகமெடுத் திடும்புட்ப தந்தம்
அயிராவதம் சீர்புண்டரீகக் குமுதம்
செப்பு சாருவ பூமம் அஞ்சனம்
சுப்பிர தீபம் வாமனம் ஆதி வாசுகி
மகா பதுமன் ஆனந்த கார்க் கோடகன்
சொற் சங்கபாலன் குளிகன்
தூய தக்கன் பதும சேடனோடு
அரவெலாம் துடித்துப் பதைத்து அதிரவே
தகதகென நடனமிடு மயிலேறி விளையாடுஞ்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
7. பாடல் விளக்க உரை
மஹாமேரு, உதயகிரி, ஹஸ்திகிரி, சக்ரவாள மலை, நிஷாதம், விந்திய மலை, நரசிம்மகிரி, அத்திகிரி ஆகிய மலைகள் விளங்கும் இந்த உலகினை எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக் கஜங்களான புஷ்பதந்தம், ஐராவதம், புண்டரீகம், குமுதம், சார்வபௌமம், சுப்ரதீபம், அஞ்சனம், வாமனம் ஆகிய எட்டு யானைகள் தாங்கி நிற்கின்றன. அதுபோல், அச்சுறுத்தக்கூடிய ஆதிசேடன், வாசுகி, மஹாபத்மன், கார்க்கோடகன், பாலகுளிகன், தக்கன், பதும சேஷன் போன்ற நாகங்களுமே, முருகன் ஏறிவரும் மயில் பறந்தாலே அஞ்சிநடுங்குமாம். அப்படியிருக்க அடியவர்களாகிய நமக்கு என்ன பயம்? முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
8. பாடல்
திங்கள் பிரமாதியரும் இந்திராதி
தேவரும் தினகரரும் முனிவரொடு
சித்திரா புத்திரர் மௌலி அகலாமல்
இருபாதஞ் சேவித்து நின்று தொழவும்
மங்கைதிரு வாணியும் அயிராணியோடு
சத்த மாதர் இருதாள் பணியவும்
மகதேவர் செவிகூறப் பிரணவம் உரைத்திட
மலர்ந்த செவ்வாய்கள் ஆறும்
கொங்கை களபம் புனுகு சவ்வாது
மணவள்ளி குமரி தெய்வானையுடனே
கோதண்டபாணியும் நான்முகனுமே
புகழ் குலவுதிருத்தணிகை மலைவாழ்,
சங்குசக்கர மணியும் பங்கயக்கரன் மருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
8. பாடல் விளக்க உரை
முருகனை யாரெல்லாம் வணங்குகிறார்கள் தெரியுமா? சந்திரன், பிரமன், இந்திரன், தேவர்கள், சூரியன், ரிஷிகள், பாவபுண்யக் கணக்கெழுதும் சித்திர குப்தன் - எல்லோரும் கரங்களை முடிமேல் குவித்து வணங்குகின்றனர். சரஸ்வதி, இந்திராணி, சப்தமாதர்கள், ஆகியோரும் வனங்குகின்றனர். தந்தைக்குப் பிரணவம் உரைத்த செவ்விதழ்களில் புன்னகையோடு அழகே உருவாக விளங்கும் முருகனது மேனியில், கந்தம், புனுகு, சவ்வாது ஆகிய வாசனைத் திரவியங்கள் பரிமளிக்க, வள்ளி தேவானையுடன் கூடி நின்ற அழகை விஷ்ணுவும் பிரமனும் புகழ்ந்து பாட, சங்கு சக்கரம் ஏந்திய கையன் திருமால் மருகன் சரவணனது அன்பர்களுக்கு வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
9. பாடல்
மண்டலம் பதினாலு லோகமும்
அசைந்திட வாரிதி ஓரேழும் வறள
வலிய அசுரர் முடிகள் பொடிபடக்
கிரவுஞ்ச மாரியெழத் தூளியாகக்
கொண்டல்நிற மெனும் அசுரர் அண்டங்கள்
எங்குமே கூட்டமிட்டு ஏக
அன்னோர் குடல் கைகாலுடன் மூளை தலைகள்
வெவ்வேறாகக் குத்திப் பிளந்தெறிந்து
அண்டர்பணி கதிர்காமம் பழநி
சுப்பிரமணியம் ஆவினன் குடி ஏரகம்,
அருணாசலம், கயிலை தணிகைமலை
மீதிலுறை அறுமுகப் பரம குருவாம்,
சண்டமாருதக் கால சம்மார அதிதீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
9. பாடல் விளக்க உரை
ஈரேழு பதினான்கு உலகும் குலுங்கியது! ஏழு கடல்களும் வற்றின! அரக்கர் தலைகள் சுக்கு நூறாக நொறுங்கின! கிரௌஞ்ச மலையாய் நின்ற சூரபதுமன் உடல் பொடிப்பொடியானது! கற்களாகச் சிதறி முருகன் காலடியில் தூசியாக ஆனது! அறுந்த உடல்கள் அங்குமிங்கும் ஓடின! உடலின் பாகங்கள் சிதறின. சூரனை அழித்தபின் முருகன் வெற்றிவீரனாக கதிர்காமம், பழனி, ஆவினன்குடி, அருணாசலம், கயிலை - இங்கெல்லாம் திக் விஜயம் செய்து சினம் தணிந்த பரமகுருவாக அமர்ந்த இடம் திருத்தணிகை! முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
10. பாடல்
மச்சங் குதித்துநவமணி தழுவ
வந்தநதி வையாபுரிப் பொய்கையும்
மதியம் முத்தம் செய்யும் பொற்கோபுரத்து
ஒளியும் வான்மேவு கோயிலழகும்,
உச்சிதமதானதிரு ஆவினன் குடியில்
வாழ் உம்பரிட முடிநாயக,
உக்ரமயிலேறிவரும் முருக சரவணபவ !
ஓங்காரசிற் சொரூபவேல்,
அச்சுத க்ருபாகரன் ஆனைமுறை
செய்யவே ஆழியை விடுத்து ஆனையை,
அன்புடன் ரட்சித்த திருமால் முகுந்தன்
எனும் அரிகிருஷ்ண ராமன் மருகன்,
சச்சிதானந்த பரமானந்த சுரர் தந்த
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !
10. பாடல் விளக்க உரை
முருகன் உறையும் கோயில்களும் அவற்றின் கோபுரங்களின் அழகும், தீர்த்தங்களின் சிறப்பும் எப்படி வர்ணிப்பது. மயிலேறிவரும் வடிவேலன் யாருடைய மருமகன்? ஒருமுறை யானை ஒன்று திருமாலைப் பூசிக்கத் தாமரை மலர் பறித்தபோது, முதலை ஒன்று காலைக் கவ்வ, ஆதிமூலமே எனக்கதறிய யானையைக் காப்பாற்றியவன் திருமால். திருமால் மருகன் முருகன். முருகனோ பரமேசுவரன் தந்த பரமானந்த சச்சிதானந்த ஸ்வரூபன். முருகனது அடியார்களை எதிர்க்கும் தீமையை முழுவதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் வாழ்க!
... சத்ரு சங்கார வேற் பதிகம் - விளக்க உரை முற்றிற்று ...
வேலுண்டு வினையில்லை! ... மயிலுண்டு பயமில்லை!!
"சத்ரு சம்ஹார வேல் பதிகம் | சஷ்டி நாளில் கேட்க வேண்டிய முருகன் பாடல் | Sathru Samhara Vel Pathigam" pic.twitter.com/AUB6OwsWjk