Sunday, October 13, 2024

சத்ரு சம்ஹார திரிசதி

ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும், முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்றும் அழைக்கிறோம். "சத்ரு சம்ஹார யாகம்" முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால், அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி" எனப்படுகிற சுலோகம்தான்.

இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும்.

உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், அகத்தியப் பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

சத்ரு சம்ஹார அர்ச்சனையின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது.




முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

  சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே  தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே  பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே  பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத...